Categories
உலக செய்திகள்

இதுதான் எங்கள் இரண்டாம் தாயகம்…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர்…. பேட்டியில் வெளியிட்ட தகவல்கள்….!!

தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் பாகிஸ்தான் எங்களது இரண்டாவது தாயகம் எனவும் அந்நாட்டுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே காபூல் விமான நிலையத்தில் பதட்டமான சூழ்நிலையே தொடர்ந்து நிலவி வருகின்றது. அதன்பின் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 25 ஆம் தேதி தலீபான்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் கூறியதாவது “பாகிஸ்தான் எங்களுடைய இரண்டாவது தாயகம் ஆகும். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும் மதத்தின் அடிப்படையில் நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்துள்ளோம். அதன்பின் எங்கள் நாட்டு மக்கள் பாகிஸ்தான் நாட்டு மக்களுடன் உறவுமுறையில் கலந்துள்ளார்கள். அதனால் நாங்கள் பாகிஸ்தானுடன் உறவை வளர்த்து கொள்ள ஆசைப்படுகிறோம். இதனையடுத்து நாங்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அனைத்து நாடுகளிடமும் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் அமைக்க இருக்கின்ற புதிய ஆட்சியை இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் உருவாக்க இருக்கின்றோம். இதில் ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எந்த நாட்டுக்கும் எதிராக நாங்கள் செயல்படமாட்டோம். நாங்கள் ஆப்கானிஸ்தானில் எல்லா பகுதிகளையும் கைப்பற்றி விட்டோம். அதனால் நாங்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியையும்  இயல்பு நிலையும்  மீட்டெடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |