தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி நெருங்கி கொண்டு சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் இருபது சதவிகிதம் போனஸ் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு துறை சார்ந்த ஊழியர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.