சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தனிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
#VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj
— Silambarasan TR (@SilambarasanTR_) August 27, 2021
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வித்தியாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.