தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.
அதன்படி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் 6 நாட்களும் பள்ளி செயல்படும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.