உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ் நகரில் விஜயமாறன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இதனை அடுத்து இளைய மகனான கோகுல் மாறன் என்பவர் திரையரங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கோகுல் மாறன் மன அழுத்தத்தின் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கோகுல் மாறனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு கோகுல் மாறன் கொடுத்த கடைசி வாக்குமூலத்தில் வாழப் பிடிக்காத காரணத்தினால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கோகுல் மாறனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கோகுல் மாறனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.