Categories
உலக செய்திகள்

ஆப்கனில் சுமுகமான அரசாங்கம் அமையும்…. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…. பொங்கியெழுந்த தலிபான்களின் தலைவர்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் எடுக்கும் முடிவுகள் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட கூடாது என்று தலிபான்களின் தலைவர் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசும்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காபூலிலுள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் தலிபான்களின் தலைவர் பேசும்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை எந்தவித பிரச்சினையுமின்றி சுமுகமாக நடத்த முடியும் என்பதை கூடிய விரைவில் இந்தியா தெரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பொது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் நாட்டிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |