Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை..!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |