ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்’ புகழ் கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சமீபத்தில் ஒரு விபத்தில் பிரகாஷ் ராஜுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என ஹரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் தற்போது பிரகாஷ் ராஜுக்கு பதில் பிரபல நடிகர் சமுத்திரகனி இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘AV33’ படப்பிடிப்பில் சமுத்திரகனி கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.