தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டில் மரிடா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் 1200க்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலசரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்னும் 17 பேரை காணவில்லை. இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மீட்பு பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.