Categories
மாநில செய்திகள்

#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 %  போனஸ் தொகையாக வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது.

இதனால் நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் போனஸ் கிடைக்கும். பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மொத்தம் 3,48,503 பேர் இதனால் பயன் பெறுவார்கள். மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில்கொண்டு 20% போனஸ் தரப்படும் நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.

Categories

Tech |