ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் வசமாகிய நிலையில் அங்கிருந்து சுமார் 1,00,000 க்கும் மேலானோரை விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டை விட்டு வெளியேற நினைத்து காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களில் கடந்த 14ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 1,00,000 த்திற்கும் மேலானோரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தின் முன்பாக தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பையும் பொருட்படுத்தாது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.