நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்று 3 மாதங்களாக தங்கள் வசம் வைத்திருந்த மர்மநபர்கள் தற்போது 100க்கும் மேலான மாணவர்களை விடுதலை செய்துள்ளார்கள்.
நைஜீரியாவிலுள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சுமார் 136 மாணவர்களை கடத்தி சென்றுள்ளார்கள். இதனையடுத்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற 136 மாணவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் மர்ம நபர்களிடம் சிக்கியிருந்த மீதமிருந்த 130 மாணவர்களில் 15 மாணவர்கள் அவர்களுக்கு தெரியாமல் எப்படியோ தப்பி வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில் சுமார் 100 க்கும் மேலான மாணவர்களை மர்ம நபர்கள் தற்போது விடுதலை செய்துள்ளார்கள்.
ஆனால் மர்ம நபர்கள் கடத்தி சென்று 3 மாதங்களாக அவர்களிடம் சிக்கியிருந்த மீதமுள்ள 115 மாணவர்களும் வெளியேறியுள்ளார்களா என்னும் தகவல் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும் கடத்தல்காரர்கள் கடத்தி சென்ற மாணவர்களில் மீதமிருந்த அனைவரும் விடுதலையாகிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.