சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் நேற்று நடிகர் நடிகர் சிம்புவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்ட் தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது.
இதையடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பெப்சி குழு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj
— Silambarasan TR (@SilambarasanTR_) August 27, 2021