Categories
அரசியல் மாநில செய்திகள்

கொழுப்புத்தனமான பேச்சு….. ”வாடகை கொடுக்க வக்கில்லை” சீமானை வெளுத்த அமைச்சர் ..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் தான் அவரை இம்மண்ணில் புதைத்தது நாங்கள்தான் என்று சீமான் பேசிய பேச்சு கொழுப்புதனமான பேச்சு என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீமான் என்ன யோக்கியமா என்று கேள்வி எழுப்பிய ராஜேந்திரபாலாஜி குடி இருந்த வீட்டுக்கு 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்க வக்கு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்தார். ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ரவுடிகள் கொலைகாரர்களை வைத்து சீமான் கட்சி நடத்துவதாகவும் ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ள அவர்,. பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சித் தலைவர் வைகோ தான் என்றும் புகழ்ந்தார்

Categories

Tech |