Categories
தேசிய செய்திகள்

செப்-1 முதல் 9, 11, 12 மாணவர்களுக்கு…. டெல்லியில் பள்ளிகள் திறப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பாதிப்பு குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து 6,7,8ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |