இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 30ஆம் தேதிவரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சில மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்து வருகின்றது. ஜூன் மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து படியே இருந்தது. கேரளா முழுவதும் இன்று முதல் 30ம் தேதி வரை நான்கு நாட்கள் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திதிருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.