பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசிய நடிகை மீராவின் வீடியோ வெளியிட்டதையடுத்து அவரை கைது செய்ய கோரி பலரும் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில் மீரா மிதுன் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் ஜோ மைக்கல் என்பவரை கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மீண்டும் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மீராமிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்திய நிலையில் ஜாமீன் வழங்க கோரியிருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இவருடைய நீதிமன்ற காவலை, செப்டம்பர் 9 ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.