தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சிமுறையில் திறக்கப்பட உள்ளது. இதனால் பல மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பதால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளி இயக்குனர் வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.