Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் கைது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகரத்தினபள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை வழிமறித்த அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திள்ளார். அதன்பின் இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா செல்வகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதத்தையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |