இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.
இந்நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி-2 பிரச்சினை தீர்ந்து விட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 23ஆம் புலிகேசி 2 திரைப்படத்தில் நடித்த வடிவேல் மீது எஸ்.பிக்சர்ஸ் சங்கர் அவர்கள் புகார் அளித்திருந்தார். தற்போது இந்த பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.