Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைனை நம்பிய தொழிலாளி… மோசடி செய்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது எதிர்தரப்பில் இருந்து பதிலளித்த நபர் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வேலைக்காக முன்பதிவு செய்வதற்க்கான கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி அந்த நபர் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய வெங்கட்குமாரும் மொத்தம் 37,000 ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் அனுப்பி வைத்துள்ளார். மேலும் பணத்தை பெற்று கொண்ட மர்ம நபர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்குமார் மர்மநபர் தொடர்பு கொண்டுபேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய தினேஷ் மீது வெங்கட்குமார் ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.

Categories

Tech |