Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டம் பாய்ந்தது…. வாலிபர் கைது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படைவெட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகின்றார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளன. இதனால் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்ட் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |