Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை” மனைவியிடம் விசாரணை ….!!

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை, ஜீசஸ் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சுபாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் ரஞ்சித்குமார் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற மர்ம கும்பல் ராஜ்குமாரின் மர்ம உறுப்பை துண்டித்ததோடு அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பின் ரஞ்சித்குமார் மீட்கப்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கொலை தொடர்பாக ரஞ்சித்குமார் மனைவி சுபாவிடம் எஸ் எஸ் காலனி காவல்துறையினர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |