Categories
அரசியல் மாநில செய்திகள்

வெங்காய வெடி வாங்க முடியுமா ? ”தகுதியற்றவர் சீமான்” கராத்தே தியாகராஜன் கருத்து …!!

வெங்காய வெடி கூட வாங்க தகுதி இல்லாதவர் சீமான் என்று காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், சீமான் தனது பேச்சால் தமிழகத்தில் எங்குமே நடமாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் எதிர்வினை ஆற்றாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சீமான் வெங்காய வெடி கூட வாங்க தகுதி இல்லாதவர் என்று கூறிவிமர்சித்ததோடு அவர் மீது தாஇளக அரசு நடவடிக்கை  வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |