தமிழகத்தில் மீண்டும் செப்டம்பர்-1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.