Categories
தேனி மாவட்ட செய்திகள்

சீரான குடிநீர் வழங்கவேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜாகவினர்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர.

மேலும் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தெய்வம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகர செயலாளர் ராமர், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்று கோஷங்களை எழுப்பியதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |