Categories
மாநில செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000….. விரைந்து வழங்குமாறு…. சென்னை மாநராட்சி அறிவுறுத்தல்…!!!

பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர வியாபாரிகள் அல்லது சில சிறு வணிகங்களைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27,33,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் தொகையை விரைவாக வழங்கிட வங்கி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் நிறுவன அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |