லண்டனைச் சேர்ந்த ஒருவர் கடைகளில் நுழைந்து ஊசி மூலமாக உணவுப் பொருட்களில் மர்ம பொருளைச் செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள Fulhamமைச் சேர்ந்தவர் 37 வயதான Leoaai Elghareeb என்பவர். இவர் Tesco, Waitrose மற்றும் Sainsbury போன்ற கடைகளில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களில் ஊசி மூலம் மர்ம பொருள் ஒன்றை செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த மக்கள் நேற்று அவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். மேலும் இந்த தகவலை மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் அவர் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததாகவும் கையில் வைத்திருந்த ஊசிகளை தெருவில் வீசி சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் மூன்று கடைகளிலும் நுழைந்து அங்குள்ள உணவுப் பொருட்களில் ஊசி மூலம் மர்ம பொருள் ஒன்றை செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த மூன்று கடைகளும் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, அந்த மூன்று கடைகளிலும் இருந்து வாங்கப்பட்ட பொருள்களை மக்கள் குப்பையில் வீசி விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஏனெனில் அந்த பொருள்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
இருப்பினும் இறைச்சி மற்றும் மைக்ரோ அவனில் வைத்து தயார் செய்யப்படும் உணவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மூன்று கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட Leoaai Elghareeb மீது உணவு பொருளை சேதப்படுத்தியதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் இன்று westminister நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.