நடிகை குஷ்பூ சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது இரு மகள்களும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகை குஷ்பூ ஆவார். இவர் 90களில் வெளியான திரைப்படங்களில் தனது நடிப்பு மூலம் பிரபலமாகியுள்ளார். மேலும் ரஜினி, கமல் மற்றும் கார்த்தி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இதனையடுத்து நடிகை குஷ்பூ தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் நடிகை குஷ்பூ சமீப காலத்தில் தனது உடல் எடையை குறைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் நடிகை குஷ்பூவின் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையை சமீபத்தில் நடிகை குஷ்பூ தனது இரு மகள்களை பற்றி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது மகள்கள் இருவரும் தளபதி விஜய்யின் மிகவும் தீவிரமான ரசிகர்கள். நடிகர் விஜய் நடிக்கும் படம் வெளியீடு என்றாலே அந்த திரைப்படத்தின் சட்டையை அணிந்து தான் திரையரங்கிற்கு செல்வார்கள். நான் ஒருநாள் தளபதி விஜய்யை பார்க்க எனது மகள்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் இருவரும் விஜய்யை பார்த்ததும் வெட்கப்பட்டு என் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்” என கூறியுள்ளார்.