தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை முக்தா அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் ஹரி ஆவார். இவர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தாமிரபரணி’ ஆகும். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் மாஸ் ஹிட்டாக ஓடியுள்ளது. இந்த திரைப்படத்தில்தான் நடிகை முக்தா ‘பானு’ என்கிற முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் நடிகை முக்தாவை ரசிகர்கள் பலரும் ‘பானு’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்து நடிகை முக்தா ‘தாமிரபரணி’ திரைப்படத்தை தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம் போன்ற பிரபலமில்லாத திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனது மார்க்கெட்டை குறைத்துள்ளார்.
பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ராதிகாவின் நடிப்பில் சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘சந்திரகுமாரி’ என்னும் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்பின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘வேலம்மாள்’ சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ‘தாமிரபரணி’ திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை முக்தா தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படம் இணையத்தில் அவருடைய ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.