Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணமா…. இணையத்தில் வெளியான செய்தி…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் நடிகை சந்திரா தனது திருமண செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சியில் 90களில் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் மிகவும் வெற்றிகரமாக  ஓடிய தொடர் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகும். இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ‘காதலிக்க நேரமில்லை’ சீரியலின் பாடல் ஹிட் லிஸ்டில் தான் இருந்துள்ளது. இதனையடுத்து இந்த சீரியலில் பிரஜன் மற்றும் சந்திரா இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரியல் நடிகை சந்திரா 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகை சந்திரா திருமண செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகை சந்திரா மலையாளத் தொலைக்காட்சியில் ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்னும் சீரியலில் தன்னுடன் இணைந்து  நடிக்கும் தோஷ் கிறிஸ்டியுன் என்பவருக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்ற செய்தியை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |