நகைச்சுவை நடிகர் சூரி தனது பிறந்தநாளை படக்குழுவினர் அனைவருடனும் பிரம்மாண்டமாக கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூர்யா ஆவார். இவர் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இதனையடுத்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் first லுக், second லுக் மற்றும் third லுக் நடிகர் சூர்யா பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவர் தனது பிறந்தநாளை படக்குழுவினர் அனைவருடனும் கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். அதன்பின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. அதன்பின் அந்த புகைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழும் உள்ளார். அதாவது இணையத்தில் வெளியான இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘குக் வித் கோமாளி’ புகழும் நடிப்பதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர்.