விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் கதாநாயகி நடிகை பிரியங்கா ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. மேலும் அதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. இதனையடுத்து விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்னும் சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த சீரியலில் சூர்யா தர்ஷன் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
இதற்கு முன்பு சூர்யா தர்ஷன் ‘அரண்மனைக்கிளி’ என்னும் சீரியலில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் மூலம்தான் கதாநாயகியாக நடிகை பிரியங்கா சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். இவர் ‘வெண்ணிலா’ என்னும் முக்கிய வேடத்தில் இந்த சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சீரியல் நடிகை பிரியங்கா டிரான்ஸ்பரன்ட் சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பிரியங்காவா இது என ஷாக்காகியுள்ளனர்.