இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது ஒரு ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல், முதலீட்டு பொருளாகவும் உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வகையான திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக டிஜிட்டல் தங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதையே டிஜிட்டல் தங்கம் எளிமைப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்ய செபி பிறப்பித்த உத்தரவின்படி தேசிய பங்குச்சந்தை தடைவிதித்துள்ளது. தற்போதைய சூழலில் டிஜிட்டல் தங்கத்துக்கு எந்த ஒரு ஒழுங்குமுறை விதிகள் இல்லை என்பதனால் தனது கட்டுப்பாட்டில் இல்லாத பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று செபி முடிவு செய்துள்ளது. இருப்பினும் டிஜிட்டல் தங்கம் வாங்க விரும்புபவர்கள் போன் பே ஆப் மூலமாக முதலீடு செய்யலாம்.