தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலை இல்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகின்றது. முகாம்களிலுள்ள பழுதடைந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார மேம்பாட்டு நிதி அது 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷனில் விலையில்லா அரிசி வழங்கப்படும்.
மேலும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், இதர பெரியவர்களுக்கான உதவித் தொகை 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உதவித் தொகை 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.