வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.. அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. “3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை.. விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.. வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்..