Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. தடுப்பூசி செலுத்திக் கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும்…. அமைச்சர் பொன்முடி….!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அதனால்தான் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மௌண்ட் ரோடு ஆர்ட்ஸ் காலேஜ் என்று இருந்த கல்லூரியை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி ஆக மாற்றியவர் கருணாநிதி அவர்கள். என்ன கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றித் தருபவன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்விழுப்புரம் மாவட்டத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |