ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து சுமார் 12 மணி நேரங்களுக்குள் 4200 நபர்கள் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, அமெரிக்கா, இந்தியா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதனால் காபூல் விமான நிலையம், அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இம்மாத இறுதிக்குள் காபூலில் மீட்புப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் தங்கள் படைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியிருக்கிறார். எனவே, ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்படுகின்றனர்.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாவது, காபூல் நகரத்திலிருந்து கடந்த 14ஆம் தேதி முதல், தற்போது வரை 1,09,200 நபர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், 12 மணிநேரங்களுக்குள் 4200 நபர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.