Categories
தேசிய செய்திகள்

புதிய வாகனங்களுக்கு BH பதிவு எண்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற்ற வேண்டும் என்பதால், இதில் ஏற்பாடு சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என துவங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, பாரத் தொடர் (Bharat series) இன் கீழ் இந்த வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

 

 

Categories

Tech |