Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 25- ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்…. விவசாயிகள் அழைப்பு….!!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதனால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் விவசாயிகள் அரசுடன் நடத்திய 12 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |