கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி கேரள மாநிலம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் அனைத்து கடைகளும் நாளை அடைக்கப்படும். பேருந்துகள் எதுவும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.