ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆணைவாடி கிராமத்தில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி வெளியூருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனை அடுத்து ராஜாமணி தனது வீட்டிலுள்ள கிரில் கேட் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து ராஜாமணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும் மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.