தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக அழைக்கப்படுகிறது.
தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே அடிப்படை வட்டி விகிதத்தை கொரிய வங்கி 0.5% முதல் 0.75% வரை உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாக தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக கருதப்படுகிறது.
மேலும் “குழு உறுப்பினர்கள் சிலர் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், வட்டி விகிதங்கள் நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆய்வாளர்களிடையே நடத்தப்பட்ட கருத்து கேட்பில் 30-ல் 16 பேர் மட்டுமே விகித உயர்வை எதிர்பார்க்கிறார்கள்” எனவும் கொரிய வங்கியின் கவர்னர் லீ ஜுயியோல் கூறியுள்ளார்.