பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் 3 பேர் நிலக்கண்ணி வெடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் துணை இராணுவத்தினர் சென்ற வாகனம் ஒன்று மங்கி தம் என்ற பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.