தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் தலிபான்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் ஆப்கானை விட்டு பொதுமக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். எனவே தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் மீதான எதிர்மறை எண்ணத்தை போக்குவதற்காக வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் “மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க கூடாது, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க மதகுருக்கள் தங்களது நாட்டவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.