தமிழகத்தில் கொரோனாவும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாதந்தோறும் அனைத்து பாடங்களுக்கும் அசைன்மென்ட்கள் தயாரித்து அனுப்பப்படும். இந்த நடைமுறை 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட அசைன்மெண்ட்களை ஒரே நேரத்தில் செய்து முடிக்க வற்புறுத்தக் கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.