இந்து முன்னணியினர் கோவிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சீர்காழி செல்கின்ற மெயின் சாலையில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் பொக்லைன் எயந்திரம் மூலமாக கோவிலை அகற்றிய நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இதை கண்டித்தும் மற்றும் மீண்டும் அதே பகுதியில் கோவிலை கட்டி தரக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க ஆகியோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் மதுபாலனை நேரில் சந்தித்து கோவிலை மீண்டும் கட்டித் தருமாறு அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.