Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில்…. சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்றே மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும்,விடுதிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்லூரிகளுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |