தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்னதாக தொடக்கத்தில் பேசிய முதல்வர், நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார்.
எப்பொழுதும் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் தமிழ் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவது வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த புகழ்ச்சி முறையை கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் வீண் அடிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறிய நிலையில் கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசியதால், இன்றுகொடுக்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும். புகழ்ந்து பேசக்கூடாது என கட்டளை இட்டிருக்கிறேன், நடவடிக்கை எடுக்க வைத்துவிடாதீர்கல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.