Categories
மாநில செய்திகள்

இனி கல்லூரிக்கே சென்று தடுப்பூசி…. ஆஹா அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது.

இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் நம் மாநில முதலமைச்சர் விளையாட்டு வீரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து வருகிறார்.  கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கும். ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நேரில் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |